தன்னை வெளியேற்றுவதற்கு எதிராக பிரித்தானிய சுற்றுலாப் பயணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

0
86
Article Top Ad

இலங்கை வந்துள்ள பிரித்தானிய சுற்றுலாப் பயணியான கெய்லி பிரேசர், தன்னை நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

காலிமுகதத்திடல் பகுதியில்நடைபெற்ற போராட்டம் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.