சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் ஆரம்பம்

0
127
Article Top Ad

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20) ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் 120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் நாட்டுக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த இரண்டு சரக்குகள் மூலம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் சுப்பர் டீசல், 95 பெற்றோல் அல்லது வேறு எந்த பிரீமியம் பொருட்களையும் உற்பத்தி செய்வதில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இது ஆட்டோ டீசல், 92 பெட்ரோல், கனரக எரிபொருள் எண்ணெய்/உலை எண்ணெய், ஜெட் எரிபொருள்/மண்ணெண்ணெய், நாப்தா, எல்பிஜி, பிடுமின் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது என்றும் அவர் கூறினார்.