Article Top Ad
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசு, கைதுகளை செய்துவருகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் நிச்சயம் எதிரொலிக்கும்.” – என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
” அவசரகால சட்டம் அவசியமில்லை எனக் கருதும் அரசு, அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திவருகின்றது. அச்சட்டத்தின்கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதன் தாக்கம் இவற்றில் நிச்சயம் எதிரொலிக்கும்.” – எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.