முரளிக்கு சென்னை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிசிச்சை என்ன?

0
372
Article Top Ad

 

இலங்கையின் கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் சிறிய சத்திரசிகிச்சையொன்றிற்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அவருக்கு உடலில் சில சிக்கல்கள் காணப்பட்டன. இந்தியா வருமுன்பாக அவை குறித்து பரிசோதனைக்குட்பட்டிருந்தார். இந்தியாவிலுள்ள மருத்துவர்கள் சிகிச்சைகளை இந்தியாவில் மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தனர். அது ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட சத்திரசிசிச்சை . அதுகுறித்து அச்சப்பட அவசியமில்லை” என முரளிதரனுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்ததாக நம்பகரமான நியூஸ்வையர் செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை முத்தையா முரளிதரன் சென்னையில் அஞ்சியோபிளாஸ்டி angioplasty சிசிச்சைக்குட்பட்டதாக பிரபல கிரிக்கட் இணையத்தளமான கிரிக்இன்போ செய்திவெளியிட்டுள்ளது. முரளிக்கு இருதயகுழாயில் காணப்பட்ட அடைப்பொன்றை நீக்குவதற்காக ஒரு ஸ்டென்ற் போடப்பட்டதாக கிரிக்இன்போ அறிகின்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்த வெளியேறியவுடன் அவர் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியில் இணைந்துகொள்வார் என மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் தனது 49வது பிறந்ததினத்தை சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியுடன் நேற்றைய தினம் கொண்டாடியிருந்ததுடன் மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது தலைமைப் பயிற்றுவிப்பாளர் டொம் மூடியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சிகள் வழியாக காணமுடிந்தது.

முத்தையா முரளிதரன் தனது இரண்டு தசாப்தகால சர்வதேச கிரிக்கட் வாழ்வில் 800 டெஸ்ற் விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்த அதேவேளை 534 சர்வதேச ஒரு நாள் விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.