“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி” என்ற தலைப்பில் மத்திய வங்கியின் ஆளுநரால் நடாத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 1 இல் நடைபெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதார திசைகள் தொடர்பில் பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். நிதி விவகாரங்கள் தொடர்பாக வரவிருக்கும் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.