ஆசியக் கிண்ணம் இன்று ஆரம்பம்: இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதல்

0
143
Article Top Ad

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த, 15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இன்று (சனிக்கிழமை) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் ஆரம்ப போட்டியில், இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் இதன் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஹொங்கொங் அணி தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதிபெற்று தொடருக்குள் நுழைந்துள்ளது.