பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது ; ஷேக் ஹசீனா நம்பிக்கை!

0
131
Article Top Ad

பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நிலையை எதிர்கொள்ளாது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது மாறாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அது முன்னோக்கி நகரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது கட்சி தலைவர்களும் ஆதரவாளர்களும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பங்களாதேஸ்ஒருபோதும் இலங்கை போன்றிருக்காது இருக்கவும் முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னைய பிஎன்பி அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஸ் இலங்கைபோன்றதொரு நிலையை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது ஆனால் அவாமி லீக் அரசாங்கம் நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டு விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவாமி லீக் நாட்டை நெருக்கடியான நிலையிலிருந்து மீட்டுள்ளது ஆகவே ஏன் பங்களாதேஸ் இலங்கை போன்ற நிலையை எதிர்கொள்ளவேண்டு;ம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.