இடைக்கால வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்!

0
130
Article Top Ad

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 105 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் பிரகாரம், 105 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 43 எம்.பிக்கள் நடுநிலை வகித்திருந்தனர்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, டலஸ் அணியினர், விமல் அணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட காட்சிகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

தேசிய மக்கள் சக்தி இடைக்கால வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தது.