மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்க அனுபதி அளிக்கமாட்டோம்!

0
129
Article Top Ad

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சில நபர்கள் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், சவாலை ஏற்றுக்கொள்ள எவரும் தயாராக இல்லாத காரணத்தினால், மக்கள் கொந்தளிப்புக்கு மத்தியில் தான் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

IMF உடன் நாங்கள் தொடங்கிய விவாதங்கள் இன்று வெற்றி பெற்றுள்ளன.கடனை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைக்கும் முடிவு குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், கடனைச் செலுத்த வேண்டுமா அல்லது மீதமுள்ள கையிருப்புத் தொகை அத்தியாவசியப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமா என்ற குழப்பத்தில் அரசாங்கம் இருந்தது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கான முடிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அதிக ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக கூறினார்.

தீர்மானம் எடுப்பதற்கு கலாநிதி வீரசிங்க தமக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்த அவர், மத்திய வங்கி ஆளுநரின் பதவியை யாராவது பறிக்க விரும்பினால், அதற்கு பதிலாக தான் பதவி விலக தயார் எனவும் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி வீரசிங்க எடுத்த தீர்மானங்களினால் இன்று மக்கள் பயனடைந்து வருவதாக அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.