Article Top Ad
15வது ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டி தொடரின் இன்று இடம்பெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹெங்கொங் அணிகள் மோதிக்கொண்டன.
நாணய சுழற்சியை வென்ற ஹெங்கொங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பக்ஹர் சமான் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹெங்கொங் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் 156 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.