இலங்கை பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்கு IMF பிரதானி மகிழ்ச்சி!

0
106
Article Top Ad

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பு என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று (1) இலங்கையுடன் பணியாளர் மட்டத்தி உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

இந்த உடன்படிக்கையில், 48 மாத வேலைத்திட்டத்துக்கு இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.