நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

0
195
Article Top Ad

அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த நடிகை தமிதா அபேரத்ன, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நடிகை நேற்று கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை தமிதா அபேரத்ன இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2022 செப்டெம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.