19ஆம் திகதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு!

0
106
Article Top Ad

மறைந்த ராணி எலிசபெத்தின் நல்லடக்க ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று ராணி எலிசபெத்தின் இறப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்லெஸ் இங்கிலாந்தில் புதிய மன்னர் ஆனார். இந்த நிலையில் இறுதிச் சடங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் முதன் முதலில் 1939இல் பிரிட்டானியா ராயல் நேவல் கல்லூரியில் தான் இளவரசர் பிலிப்யை பார்த்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடிதம் எழுதி தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

தன்னுடைய 13 வயதில் இளவரசர் பிலிப்யை கண்டு காதல் கொண்ட அவர் 21 வயதில் அவரையே திருமணமும் செய்துகொண்டார். இளவரசர் பிலிப்யை எலிசபெத்துக்கு திருமணம் செய்ய சில எதிர்ப்புகள் கிளம்பியது. காரணம் எலிசபெத் இங்கிலாந்து ராஜ பரம்பரையை சேர்ந்தவர். பிலிப் கீரிக் நாட்டை சேர்ந்த இளவரசராக இருந்தார். இதனால் பிலிப் தனது கிரீக் மற்றும் டேனிஷ் பட்ட பெயர்களைத் துறந்து ராணியை 20 நவம்பர் 1947இல் கரம் பிடித்தார் இளவரசர் பிலிப். இருவருக்கும் சார்லஸ் மற்றும் ஆன்னே என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

1952இல் கிங் ஜார்ஜ் 5 இறப்பின் பின் இளவரசி எலிசபெத், ராணி எலிசபெத் ஆகப் பதவியேற்றார். மேலும் இளவரசர் பிலிப் ராணிக்குத் துணையாக “கான்சார்ட்” என்றே அழைக்கப்பட்டார். சுமார் 74 ஆண்டுகள் இருவரும் இணைத்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல், 9 ஆம் நாள் இளவரசர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் தனது 99 வயதில் உடல் நலம் மற்றும் வயதின் காரணத்தினால் உயிர் எய்தினார்.

தற்போது அவரின் மறைவின் பின் ஒரு வருடம் ஆன நிலையில் ராணி எலிசபெத் மறைத்துள்ளார். உலக வரலாற்றில் பெரும் ஆட்சியைப் புரிந்து சுமார் 70 வருடங்கள் ராணியாகப் பதவி வகித்த, ராணியின் காதல் கதை பிரபலமாக இருக்கும் ஒன்று என்பது மறக்க மற்றும் மறுக்க முடியாதது.