முட்டை ,கோழி இறைச்சி விலை மீண்டும் அதிகரிப்பு

0
123
Article Top Ad

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறுகிறார்.

“இந்த மாதம் முதல் தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கோழிப்பண்ணை தொழிலில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. VAT 12% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.

புதிய பாதுகாப்பு வரி 2.5% விதிக்கப்பட்டுள்ளது. இது இறுதி தயாரிப்புக்கு சுமார் 7.5% அதிகரிக்கலாம். அனைத்து சூழ்நிலையிலும், உற்பத்தி செலவை பொறுத்து கோழி இறைச்சியின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அமைச்சரிடம் இன்று திங்கள்கிழமை விவாதிப்போம். முட்டைகான கட்டுப்பாட்டு விலையில் இருந்து எப்படி அதனை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.

தற்போது 50% உற்பத்தியாளர்கள் முட்டையின் கட்டுப்பாட்டு விலையால் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

முட்டையிடும் கோழிகள் கூட இறைச்சிக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன என்றார்.