ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வில் இலங்கை தொடர்பான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வரைவுத் தீர்மானத்தை பிரித்தானியா தலைமையிலான குழு முன்வைத்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டுவருகின்றன.
அதன் வரைவு முன்மொழிவில், நல்லிணக்கம் மற்றும் நாட்டின் அனைத்து குடிமக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பத்தல் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு குறித்த குழு அழைப்பு விடுத்துள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உட்பட உள்ளுராட்சி நிர்வாகத்தை மதித்து, பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளையும் திறம்பட செயல்படுவதை உறுதிப்படுத்தவும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.