அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனம் இலங்கைக்கு மருத்துவ உதவி!

0
129
Article Top Ad

உடல்நலம் மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான Americares”, 773,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான (மதிப்பீடு செய்யப்பட்ட LKR 279,476,100.28) இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவையான மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தூதுவர் மகிந்த சமரசிங்கவின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடையில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பாலூட்டும் வைட்டமின்கள், நாட்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் ஆகியவை இலங்கை சுகாதார அமைச்சிலிருந்து அவசரமாகத் தேவைப்படுவதாக தூதரகம் கோரிக்கை விடுதத்தன் பயனாக இந்த நண்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது.