ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் போராடுவோம்! நினைவேந்தல் நிகழ்வில் பேராயர்

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்படுவதில் இருந்தே, உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படும்."

0
252
Article Top Ad

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்.”

– இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்படுவதில் இருந்தே, உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படும்.

இந்தத் தாக்குதலுக்கான நீதியைத் தாமதப்படுத்துவது, முழு நாட்டின் பாதுகாப்பையும் ஆபத்தில் விடுவதற்குச் சமமாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படும் நிலையில், தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக எவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்” – என்றார்.