சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை இன்று (27) டோக்கியோவில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதே தனது முன்னுரிமை எனவும் அவர் விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் லீ சியென் லூங் இந்தச் செய்தியை வரவேற்றதுடன், சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் சிங்கப்பூர் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.