இலங்கை சுற்றுலாத்துறை புத்துயிர் பெறுகிறது!

0
90
Article Top Ad

2023ஆம் ஆண்டு நாட்டிற்கு ஒரு கனவு ஆண்டாக இருக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் மீள வர தொடங்கியுள்ளனர்.

புதுடில்லியில் இலங்கையின் சுற்றுலா சாலைக் கண்காட்சியில் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையின் சுற்றுலாத் துறையானது அதன் மீட்சிப் பாதையில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துளார்.

இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறையின் முதல் விஜயம் இதுவாகும்.

பெர்னாண்டோ மற்றும் அவரது தூதுக்குழுவினர் இந்தியாவிற்கான பல நகர சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வாக புதுடில்லியில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ, சர்வதேச சுற்றுலா சந்தைகளில் வலுவாக மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, முன்னணியில் பங்கேற்பதற்கு இலங்கை பெரிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறினார்.

2018ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட முயற்சித்து வருகிறோம். அதற்காக, விசா விதிகளை தளர்த்துவது போன்ற பல நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்க சர்வதேச பிரச்சாரத்துடன் இணைந்துள்ளோம். இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஒரு கனவு ஆண்டாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ”என்றும் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.