மனிதவுரிமைகள் பேரவையின் நிறைவு கூட்டத்தொடரில் பங்கேற்கும் அலி சப்ரி பயணம்!

0
150
Article Top Ad

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரின் நிறைவுப் பகுதியில் பங்கேற்பதற்காக, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவாவிற்கு பயணமாகவுள்ளார்.

எதிர்வரும் 07ஆம் திகதி கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மலாவி, மொன்டெநேக்ரோ(Montenegro), வடக்கு மெசிடோனியா(North Macedonia) மற்றும் அமெரிக்காவினால் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் மேம்பாடு போன்ற தலைப்புகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வௌிவிவகார அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகளும் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.