பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீதான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

0
152
Article Top Ad

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயை 203 ஆகப் பேணத் தவறியமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை முறையாகப் பெறத் தவறியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்திடம் இருந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி அமர்வு கோரியுள்ளது.