புதிய சுகாதார அறிவுறுத்தல்கள்: பாடசாலைகள் மூடப்படுமா?

0
243
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொரோனாக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ இந்தப் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய வழிகாட்டல்கள் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் ஒரு வீட்டில் இருந்து இருவருக்கே வெளியில் செல்ல முடியும்.

* பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தின்போது, ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லல்.

* அரச மற்றும் தனியார் பிரிவுகள் போதிய, குறைந்த ஊழியர்களுடன் வேலைகளைத் தொடரப் பணிப்புரை.

* மாநாடுகள், பயிற்சி நெறிகள் மற்றும் கூட்டங்களைக் கட்டடத்தில் பங்கேற்கக்கூடிய தொகையில் 50 வீதமானோரது பங்குபற்றலுடன் நடத்துதல்.

* அனைத்து விற்பனை நிலையங்களிலும் 1.5 மீற்றர் இடைவெளியைப் பேணி, சுகாதார வழிகாட்டல்களுடன் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

* பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

* மரணங்களின்போது 25 பேரின் பங்கேற்புடன் இறுதிச் சடங்கை மேற்கொள்ளல்.

* மத ஸ்தலங்களில் 50 பேருக்கு மாத்திரம் அனுமதியோடு, கூட்டு நடவடிக்கைகளுக்குத் தடை.

*பல்கலைக்கழகங்கள் உட்பட உயர் கல்வி நிலையங்களை முழுமையாக மூடுமாறு உத்தரவு.

* தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கும் தடை.

* பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை 50 வீத மாணவர்களுடன் நடத்த பணிப்புரை.