அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி மறைவு!

0
219
Article Top Ad

அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி, கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் காலமாகியுள்ளார்.

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் தமது 69 ஆவது வயதில், கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர், வடக்கு மத்திய பிரிவிற்கான பிரதம சங்கநாயக்கராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிக் கிரியைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஜனாதிபதி முக்கிய நபர்கள் சிலரை நியமித்துள்ளார்.

இதற்கமைய வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், பௌத்த மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோரை தேரரின் இறுதிக் கிரியைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளார்.