கொரோனாவால் திணறும் இலங்கை! – மேலும் 892 பேருக்குத் இன்று இதுவரை தொற்று

0
320
Article Top Ad

இலங்கையில் மேலும் 892 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 271 பேருக்கு இதுவரையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 177 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இப்னு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இவ்வாறு கைதானவர்களில் 134 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.
…….