மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்தியாவின் என்ஐஏ குற்றப்பத்திரிகை!

0
117
Article Top Ad

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குழுவை உயிர்ப்பிக்க பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு(என்ஐஏ) இன்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

“தமிழகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் – நவீன் என்கிற சக்கரவர்த்தி எம், சஞ்சய் பிரகாஷ் ஜே மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது” என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி பிரிவு அருகே கடந்த மே 19-ஆம் திகதி வாகனச் சோதனையின்போது நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப்பொடிகள் மீட்கப்பட்டது என என்ஐஏ தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ யால் ஈர்க்கப்பட்டவர்கள், மேலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினர்” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு முதலில் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த மே 19ஆம் திகதிபதிவு செய்யப்பட்டு, பின்னர் என்ஐஏவால் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்