வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய பொருளாதார வலயங்கள்!

0
125
Article Top Ad

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேல், வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் புதிய பொருளாதார வலயங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு பொருளாதார வலயத்திற்கும் குறைந்தது 1000 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.