அடாவடி பொலிஸாரை இனங்காண உதவிகோரிய ஊடகவியலாளருக்கு எதிராக விசாரணை

0
167
Article Top Ad

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றின் போது தமது அதிகாரததை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் அதிகாரிகளை இனங்காண உதவுமாறு சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன ,சிஐடி எனப்படும் குற்றவியல் விசாரணைப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை ( அவர்களில் சிலர் தம் பிள்ளைகளுடன் வந்திருந்தனர்) அகற்றுவதற்காக பொலிஸாரில் பலர் அதிக பலத்தைப் பிரயோகித்ததாக கூறி அவர்களை இனங்காணும் வகையில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன இந்த பதிவை  இட்டிருந்தார்.

பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடொன்றையடுத்து இன்று காலை விசாரணைக்கு வருமாறு தமக்குப் பணிக்கப்பட்டிருந்தாக தரிந்து ஜயவர்த்தன தெரிவித்தார்.