வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

0
134
Article Top Ad

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்க உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு நீதிமன்றில் இன்று (17) பிற்பகல் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தங்காலை பழைய சிறைச்சாலை கட்டிடத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (17) மாலை 5.00 மணியளவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கலுமுவதொர போராட்ட சம்பவம் தொடர்பில் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.