‘வரி நீக்கம்’ குறித்து ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0
117
Article Top Ad

கைத்தொழில்கள் மற்றும் உற்பத்திகளின் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் வகையில் வர்த்தக சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குள் சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத வரிகளை நீக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் தொடர்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை முறியடித்து இலக்குகளை அடைவோம் என்ற தொனிப்பொருளில் எந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதில் அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி தனியார் துறையினருக்கும் பாரிய பங்கு உண்டு எனவும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.