இலங்கைத் தமிழ் மக்கள் மீதான கரிசனை தேர்தல்காலத்திற்கு மட்டுப்படுதப்பட்டதாக அன்றி உண்மையானதாக இருக்கவேண்டும்-இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து

0
568
Article Top Ad

இலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி  உண்மையானதாக அமையவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

‘இந்தியா டுடே’ ஊடக நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டுள்ளார்.

இலங்கைத்தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது . ஏனெனில்  அது இயற்கையானது. ஏனெனில்.இருதரப்பினருக்கும் இடையே மொழியால் உறவுநிலை இருக்கின்றது.

“தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் ஒரு விடயத்தை  தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது   தேர்தல்தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து தேர்தலுக்கு மறுதினம் முடிவடைகின்ற ஒருவிடயமாக இருக்கக்கூடாது சில வேளைகளில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரிக்கும்.  பின்னர் அது தணிந்துபோகும். ‘