தன்ஸானியாவின் ஜனாதிபதி கொரோனாவினால் பலியானாரா?

0
559
Article Top Ad

 

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்ஸானியாவின் ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli) தனது 61 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதய செயலிழப்பே அவரது மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் உப ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீரம் பொருந்திய தலைவரை தன்ஸானியா இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் உப ஜனாதிபதி , 14 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதி கடந்த மாதம் 27 ஆம் திகதி மக்கள் மத்தியில் இறுதியாக தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்ததாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் அவை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.