ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் West Side Story புதிய முயற்சி

0
561
Article Top Ad

 

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் ஜுராசிக் பார்க், வோர் ஒஃப் த வேல்ட்,த போஸ்ட், ஜாஸ் ரெடி இன் ப்ளேயர், முனிச் , எம்பயர் ஒஃப், த சன் உள்ளிட்ட படங்களை இயக்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதையும் 2 முறை பெற்று இருக்கிறார்.

1961-ல் வெளியான West Side Story வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வந்த நிலையில் கொரோனாவால் பணிகள் முடங்கியது. இந்த நிலையில் அடுத்து தனது குழந்தை பருவ வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க தயாராகி இருக்கிறார்.

சிறுவயதில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வளர்ந்தபோது தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தின் திரைக்கதையை அவர் எழுதி இருக்கிறார். 1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பது போன்ற கதையம்சத்தில் படம் தயாராகிறது. இந்த படத்தில் மிச்செல் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளனர். ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் ஒரு முயற்சியில் இறங்கினால் அது புதுமையாகவே இருக்கும் என்பதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று. அந்தவகையில் தற்போதைய முயற்சியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.