சூயஸ் கால்வாய் முடக்கத்தால் உலக நாடுகளில் பொருட்களின் விலைகள் உயரும் ஆபத்து

0
406
Article Top Ad


உலக கடல்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான சூயஸ்  கால்வாய் ஊடான போக்குவரத்து தற்போது முடக்கப்பட்டுள்ளதால் கடற்போக்குவரத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

டிரபிக் இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கும் டென்ஷன் ஆகிடும். தரையில போனால்தான் டிரபிக் ஆகுமென்றால் கப்பல்ல போனா இங்கயும் ‘டிரபிக் ஜாம்’என்கிற ரீதியில் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை கேட்க வேடிக்கையாக இருந்தாலும்  விடயம் ரொம்பவும் சீரியஸானது. எகிப்தின் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையாக பார்க்கப்படுகிறது. 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும். இந்த நீர்வழிப்பாதையில் பயணித்த எவர்கிவ்வன் (Ever Given) என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டதால் அதன் பின்னால் பல கப்பல்கள் அணிவகுத்து நிற்கிறதாம். சிக்கிய கப்பலும் சாதாரண கப்பல் இல்லையாம். 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றாம் இந்த எவர்கிவ்வன். சூயஸ் கால்வாயில் வந்து வசமாக சிக்கிய மிகப்பெரிய கப்பலும் இதுதானாம். இந்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.


மீட்புப்பணிகள்

இந்த கால்வாயின் வழியாக உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 8 சதவிகிதமும் உள்ளதாம். ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறதாம். டிமாண்ட், சப்ளை என க்ளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஓரிரு நாள்களில் கப்பலை மீட்க முடியவில்லை என்றால் மசகு எண்ணெய் விலை ஏறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையும் உயரும் என கூறப்படுகிறது.


சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிய கப்பல்

இந்த எவர்கிவ்வன் கப்பல் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் சூயஸ்கால்வாய் வந்துள்ளது. நெதர்லாந்துக்கு போகிற வழியில் இப்படி சிக்கிக்கொண்டது. பலத்த காற்று வீசியதால் கப்பல் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. கப்பலில் இருப்பவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இழுவைப் படகுகளை வைத்து கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கப்பல் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லையாம். கப்பலை ஓரிரு நாள்களில் மீட்க முடியவில்லை என்றால் பழைய பாதையை தற்காலிகமாக திறப்போம் என எகிப்து அரசு கூறியுள்ளதாம்.

கப்பலை மீட்க வேண்டும் என்றால் கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் மணலை தோண்டி அப்புறப்படுத்திதான் மீட்க வேண்டும். 1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய் முதலில் 164 கி.மீ நீளம் தான் இருந்ததாம். அதன்பின்னர்தான் வருமானத்தைபெருக்கும் நோக்கில் 193 கி.மீ விரிவாக்கம் செய்யப்பட்டதாம். 2015 முதல் பெரிய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாதையை எகிப்து அரசு திறந்தாலும் கப்பல்கள் கடக்க வாரங்கள் ஆகும்.