ஈஸ்டருக்கு முந்திய குருத்தோலை ஞாயிறுதினத்தில் இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல்

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையை மீட்பராம் இயேசுக் கிறிஸ்து மரணத்தை வெற்றிகொண்டு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறுதினமாகக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0
299
Article Top Ad

தபசு காலத்தை அனுஷ்டிக்கும் கத்தோலிக்கர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு தினமான இன்று (28) இந்தோனேஷியாவின் மகாசர் நகரில் கத்தோலிக்க தேவாலயமொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென் சுலவேசி மாகாணத்திலுள்ள மகாசர் எனும் நகரில், தேவாலயத்தில் ஆராதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அந்நாட்டு மத விவகார அமைச்சர் (யாகுத் சொலில் கூமாஸ்) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தேவாலயத்திற்கு நுழைய முற்பட்டுள்ள நிலையில், தேவாலய உத்தியோகத்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியபோதே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்திற்கு வெளியே குண்டுவெடிப்பில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளின் உடல் பாகங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையை மீட்பராம் இயேசுக் கிறிஸ்து மரணத்தை வெற்றிகொண்டு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறுதினமாகக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதல்களில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமுற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது