ஆபத்தைத் தவிர்க்க Google Searchல் இந்த 8 விடயங்களைத் தேடாதீர்கள்

*எல்லா பதில்களையும் கொண்ட கூகுளில் தான் எல்லா சிக்கல்களும் உள்ளது. *சில குறிப்பிட்ட கூகுள் தேடல்கள் பெரும்பாலும் ஆபத்தில் தான் சென்று முடியும்.

0
381
Article Top Ad

நமக்கு சில தகவல்கள் தேவைப்படும்போதெல்லாம் நாம் கூகுள் தேடலை (Google search) பெரிதும் நம்புகிறோம்!

முகவரிகள் தொடங்கி வலைத்தளங்கள், படிவங்கள், திரைப்படங்கள் அல்லது எதுவாக இருந்தாலும், கூகுள் தேடல் தான் – இன்டர்நெட்டில் நமக்கான சிறந்த நண்பன், நண்பி, எல்லாமே!

இருப்பினும், வெறுமனே கூகுள் தேடலை கண்மூடித்தனமாக நம்பியிருப்பது, நம்புவது சில நேரங்களில் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆகவேண்டும்!

ஏனென்றால், கூகுளில் நீங்கள் கண்டறிந்த தகவல்கள் அனைத்துமே கூகுளுக்கு சொந்தமானவை அல்ல!

ஸ்கேமர்கள் (scammers) விரிக்கும் வலையில் நீங்கள் போலி வலைத்தளங்கள், போலி தொடர்பு விவரங்கள் அல்லது போலி முகவரிகளுக்கு – உங்களுக்கு தெரியமலேயே கூகுள் வழியாகவே – அழைத்து செல்லப்படலாம்.

ஏனெனில் ஸ்கேமர்களுக்கு கூகுள் தேடல் முடிவுகளை எப்படி தங்களுக்கு ஏற்றதுபோல் மாற்ற வேண்டும் என்கிற ஏமாற்று (வேலைகள்) வழிகள் தெரியும்.

ஒருவேளை நீங்கள் ஸ்கேமர்களின் இலக்காக இல்லாவிட்டாலும் கூட, சில சமயங்களில் மருத்துவ அல்லது தொழில் ஆலோசனையைப் பெறும்போது நீங்கள் தவறான தகவல்களைப் பெறலாம்.

ஒட்டுமொத்தமாகவே கூகுளில் காணப்படும் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது எப்போதுமே ஒரு கடினமாக காரியமாகவே உள்ளது, ஏனெனில் கூகுள் தேடல் என்பது ஒரு ஆன்லைன் தளமாகும், அங்கு உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களை நீங்கள் காணலாம்.

அந்த வலைத்தளங்கள் வழங்கும் உள்ளடக்கத்தை விட, கூகுள் தேடலில் நீங்கள் காணும் முடிவுகளுக்கு பின்னால் எஸ்சிஓ (SEO) திறன்களே பெரிய பங்கு வகிக்கின்றன. ஆக ஒருவர் SEO-வில் கில்லாடியாக இருந்தால், அவர் பக்கம் நீங்கள் இழுத்து செல்லப்படுவதற்கும் கூகுளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அதாவது நீங்கள் கூகுள் மேல் பழி போடா முடியாது.

மாறாக நீங்கள் உஷாராக இருக்கலாம்! அதெப்படி? ரொம்பே ஈஸி தான்!

கூகுளில் தேடல்களை நிகழ்த்தும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 8 விஷயங்களை இங்கே பட்டியலிட்டுளோம். அதை புரிந்துகொண்டு நடைமுறை படுத்தினால் போதும்.. கூகுளில் நீங்கள் Safe தான்!

download.jpg

01. கூகுளில் கஸ்டமர் கேர் தொடர்பு எண்களைத் தேடும்போது கவனமாக இருங்கள்!

இது மிகவும் பிரபலமான ஒன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். மோசடி செய்பவர்கள் போலி வணிக பட்டியல்களையும் அதற்கு பின்னால் “நடப்பில் இல்லாத அல்லது இல்லவே இல்லாத” Customer care எண்களையும் வலைத்தளங்களில் இடுகையிடுகிறார்கள்.

அவைகள் அசல் Customer care  எண்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள். அவைகள் பெரும்பாலான ஆப்களால் உள்ளமைக்கப்பட்ட விளம்பர விண்டோக்களையே கொண்டிருக்கும். கடைசியாக நீங்கள் அழைக்கக்கூடிய எந்த தொடர்பு எண்ணும் அதில் இருக்காது!02. கூகுளில் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களைத் தேடும்போது எப்போதும் URL-ஐ இருமுறை சரிபார்க்கவும்!

சரியான அதிகாரப்பூர்வ URL உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க Google சர்ச் செய்யாமல் இருப்பதே நல்லது.

உங்கள் லாக்-இன் விவரங்களைபெறுவதற்காக ஆன்லைன் மோசடி செய்பவர்கள் போலி ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை உருவாக்கி இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம்.

எப்போதும், பாதுகாப்பாக இருக்க உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி போர்ட்டலின் அதிகாரப்பூர்வ URL ஐ உள்ளிடவும்.

03. Appகளையும் சொப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்ய அவைகளை Google-இல் தேட வேண்டாம்!

Google வழியாக பயன்பாடுகள், மென்பொருள் அல்லது பிற கோப்புகளைத் தேடுவதைத் தவிர்க்கவும்.

எப்போதுமே Android க்கான Google Play மற்றும் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் பயன்பாடுகளைத் தேடுங்கள்.

மால்வேர் மென்பொருள் மற்றும் ஆப்களுக்கான இணைப்புகளால் கூகுள் நிரம்பி வழிகிறது என்பதே இதற்குக் காரணம்.

 

04. கூகுளில் மருந்துகள், மருத்துவ அறிகுறிகளைத் தேடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்!

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், ஒரு மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில் கூகுள் நிச்சயமாக – மருந்துகள் அல்லது சுகாதார ஆலோசனையைத் தேடும் ஒரு இடம் அல்ல.

 

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு நோயைப் பற்றி அறிய மருத்துவரைத் தவிர்த்தாலும் பரவாயில்லை, ஆனால் கூகுள் தேடல் தகவல்களை நம்பாமல் இருப்பது மிகவும் நல்லது. மேலும், கூகுளில் நீங்கள் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில் மருந்துகளை வாங்குவதும் ஆபத்தானது.

05. கூகுள் தேடல்  செய்வதின் மூலம் கண்டறியப்படும் மருத்துவ, ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு உதவிக்குறிப்புகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்!

ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது மற்றும் வித்தியாசமாக செயல்படுகிறது. எனவே, எடை இழப்பு அல்லது பிற ஊட்டச்சத்து உதவிக்குறிப்புகள் குறித்து கூகுளின் ஆலோசனையை எப்போதும் கையிலெடுக்க வேண்டாம். உங்கள் உணவை மாற்ற விரும்பினால், ஒரு டயட்டீஷியனை அணுகவும். நீங்கள் எடை இழக்க விரும்பினால், முதலில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

 
 

06. கூகுளில் தேடுவதன் மூலம் நீங்கள் கண்டறிந்த தனிப்பட்ட நிதி, பங்குச் சந்தை உதவிக்குறிப்புகளை நம்ப வேண்டாம்!

ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி அனைவருக்கும் தனித்துவமானது. அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஒருபோதும் இருக்க முடியாது. எனவே, முதலீடு செய்யும் போது கூகுள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்க்கவும்.

07. கூகுள் வழியாக கிடைக்கும் அரசாங்க வலைத்தளங்களின் URL-ஐ எப்போதும் இருமுறை சரிபார்க்கவும்!

வங்கி வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்களும் மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும்.

எந்த வலைத்தளம் அசல் என்பதை அடையாளம் காண்பது கடினம் என்பதால், எந்த குறிப்பிட்ட அரசாங்க வலைத்தளத்தையும் கூகுளில் தேடுவதற்குப் பதிலாக நேரடியாக உள்நுழைவதை தேர்வுசெய்யவும்.

08. கூகுளில் கூப்பன்கள், ஈ-காமர்ஸ் வலைத்தளங்களின் சலுகைகளைத் தேடுவதைத் தவிர்க்கவும்!

 
ஈ- கொமர்ஸ் வலைத்தளங்களில் அணுக கிடைக்கும் சலுகைகள் என்று “கூவும்” போலி வலைப்பக்கங்கள் கூகுள் தேடலில் நிரம்பி வழிகின்றன.

மக்கள் சில கவர்ச்சிகரமான போலி சலுகைகளுக்கு ஆசைப்பட்டு தங்கள் 
ன்லைன் வங்கி உள்நுழைவு விவரங்களை பணயம் வைக்கிறார்கள்.

எனவே.. உங்களுக்கு மட்டும் தான் இந்த இலவச கூப்பன் என்று ஏதேனும் விளம்பரங்களை கண்டால் – அதை என் சார்பாக நீயே வைத்துக்கொள் என்றுகூறி விட்டுவிடுங்கள்!