ஹொங்கொங் சட்டமன்ற உறுப்பினர் தெரிவு முறைமையில் மாற்றம்

0
441
Article Top Ad

ஹொங்கொங்கில் மேலும் சீன மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் கம்யூனிஸ அரசாங்கம் காய்களை நகர்த்திவருகின்றது. அந்தவகையில் சீனாவிற்கு சொந்தமான விசேட நிர்வாக பிராந்தியமான ஹொங்கொங்கின் சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் விதம் தொடர்பிலான அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, ஹாங்காங் சட்டமன்றத்திற்கு மக்களின் வாக்குகளால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பெயரிடும் அதிகாரம் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்திற்கு சீன மக்களும் காங்கிரஸின் 167 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதற்கமைய சீன ஆட்சிக்கு சார்பான குழுவினரை ஹாங்காங் சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சி வலுவிழக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1997 ஆம் ஆண்டு சீனாவின் விசேட நிர்வாக பிராந்தியமாக அறிவிக்கப்பட்ட ஹாங்காங் தற்போது ஒரே நாட்டில் தனியான நிர்வாகத்தின் கீழ் செயற்படுகிறது.

சீனாவின் ஆட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் அண்மைக்காலத்தில் ஹாங்காங்கில் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.