பகிரங்க மன்னிப்புக் கேட்கத்தவறியமைக்காக கைதுசெய்யப்பட்டாரா உலக திருமதி அழகுராணி ?

0
647
Article Top Ad

 

திருமதி இலங்கை Mrs. Sri Lanka அழகுராணிப் போட்டியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக உலகின் நடப்பு திருமதி Mrs. World அழகுராணியாக திகழும் கரலின் ஜுரியும் இலங்கையின் முன்னாள் முன்னணி மொடல் அழகியுமான சூலா பத்மேந்திரவும் கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு உலக திருமதி Mrs. World அழகுராணி

 

முன்னாள் முன்னணி மொடல் அழகி சூலா பத்மேந்திர

மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றையதினம் பொலிஸில் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதையடுத்தே இவ்விரு பெண்களும் கைதுசெய்யப்பட்டதாக திருமதி இலங்கை அழகு ராணிப் போட்டியின் தேசிய பணிப்பாளரான சந்திமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக புஷ்பிகா டி சில்வாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதற்கு கரலின் ஜுரி தவறியிருந்ததுடன் எழுத்துமூலமான மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கு புஷ்பிக்கா டி சில்வா இணங்காத நிலையிலேயே கரலின் ஜுரியும் சூலாவும் கைதுசெய்யப்பட்டதாக சந்திமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியின் போது இறுதி வெற்றியாளராக புஷ்பிகா டி சில்வா அறிவிக்கப்பட்டு கிரீடம் சூடப்பட்ட பின்னர் அவரது மகுடம் பறிக்கப்பட்டது.

திருமதி இலங்கை அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் திருணமாகி இருக்க வேண்டும் என்பது போட்டி விதிமுறை எனவும் அதனை திருமதி இலங்கை அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா மீறியுள்ளதாகவும் அவர் ஏற்கனவே விவாகரத்தானவர் எனவும் கூறியே கரலின் ஜுரி கிரீடத்தை கழற்றியிருந்தார்.

கிரீடத்தை அவசர அவரத்தில் அவர் கழற்றியபோது முன்னாள் மொடல் அழகி சூலா பத்மேந்திரவும் அங்கு வந்து கிரீடத்தை ஆவேசமாக கழற்ற முனைந்தார். இதன்போது தனது தலையில் காயமேற்பட்டதாக வைத்தியசாலையில் தானே சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார். விவாகரத்தானவர் என்ற குற்றச்சாட்டில் கிரீடத்தை பறித்தமை தொடர்பாக புஷ்பிகா டி சில்வா நடப்பு உலக திருமதி அழகுராணி கரலின் ஜுரிக்கு எதிராகவும் முன்னாள் மொடல் அழகி சூலா பத்மேந்திரவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

இதேவேளை கொழும்பில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது புஷ்பிகா டி சில்வாவிற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் கிரீடத்தை சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமதி இலங்கை அழகுராணி கிரீடத்தை மீண்டும் சூடிய பின்னர் புஷ்பிகா டி சில்வா

புஷ்பிகா டி சில்வா தனது புதல்வனுடன்…

சுவாரசியமான வர்ணனை

அழகு ராணிப் போட்டியில் நடந்த அசிங்கமான நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல யூடியூப் பதிவாளர் மிகவும் சுவாரசியமான முறையில் வர்ணனை செய்துள்ளார்.