இலங்கையை சீன காலனித்துவ நாடாக மாற்றுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை-முருத்தொடுவே தேரர்

0
236
Article Top Ad

இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என நாராஹேன் பிட்ட அபேயராம விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் விசேட சட்ட மூலம் தொடர்பாக இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015ம்ஆண்டு ஜனவரி மாதத்தில் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து அவரது அரசியல் மீளெழுச்சியில் முக்கிய பங்காற்றியவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது

கொழும்பு துறைமுக நகரத்திற்கோ முதலீடுகளுக்கோ தாம் எதிரானவர் அல்ல எனத் தெரிவித்த தேரர் கொழும்பு துறைமுக நகரமானது இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இலங்கை சீனாவின் காலனியாக மாறும் அபாயமுள்ளதாக சுட்டிக்காட்டினார்.