இலங்கை பொருளாதாரத்தின் உண்மை நிலை என்ன?

0
336
Article Top Ad

அமெரிக்க டொலருக்கு எதிராக அண்மைக்காலத்தில் இலங்கை ரூபா கண்டுவரும் வரலாறு காணாத சரிவு இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதை தெளிவாக உணர்த்துவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.62 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குளோப் தமிழுக்கு இன்றையதினம் வழங்கிய மெய்நிகர் நேர்காணலில் அவர் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.