அணுச்சக்தி மூலப்பொருட்களுடன் இலங்கைக்கு பிரவேசித்த சீனக் கப்பலை வெளியேறுமாறு இலங்கை உத்தரவு

0
223
Article Top Ad

 

அணுச்சக்தி மூலப்பொருட்களுடன் இலங்கைக்கு பிரவேசித்த சீனக் கப்பலை வெளியேறுமாறு இலங்கை உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்தின் Rotterdam-இல் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் இந்த கப்பலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக , கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

சீனக் கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்தபோது அதற்குள் இருக்கும் பொருட்கள் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றிரவு (20) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலில் கதிரியக்க பொருட்கள் காணப்படுவதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக ரஞ்சித் கூறினார்.

இதனால் உடனடியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கப்பலை வௌியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடற்படையினரிடம் இந்த விடயம் குறித்து வினவிய போதுஇ குறித்த கப்பலானது துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.