அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் 93 வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
சரியாகச் சொல்வதென்றால் ,அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணிக்கும், இலங்கை நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கும் இவ்விழா ஆரம்பமாகியது .
இம்முறை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விழா நடைபெற்றது.
வழக்கமாக பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.
மாங்க், மா ரெயினிஸ் பிளாக் பாட்டம், சோல், ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா, மாங்க் ஆகிய படங்கள் 2 ஒஸ்கார் விருதுகளை வென்றன. சிறந்த திரைப்படத்திற்காக விருதை நோமேட்லேண்ட் திரைப்படம் சுவீகரித்தது.சிறந்த படம், சிறந்த இயக்குனர் ,சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
ஒஸ்கரின் 93 வருட வரலாற்றில் பெண் இயக்குநருக்கு இரண்டாவது தடவையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிக்கைக்கான விருது ஃபிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு(Frances McDormand) நோமேட்லேண்ட் திரைப்படத்தின் கதாநாயகிக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் விருது 83 வயதாகும் பழம்பெரும் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸுக்கு (Anthony Hopkins), ‘The Father’ திரைப்படத்துக்காக கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் Judas and the Black Messiah படத்துக்காக Daniel Kaluuya பெற்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது The Father திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.
ஒஸ்கார் விருது பெற்றவர்கள் முழு விபரம் :
சிறந்த மூல திரைக்கதை – ப்ராமிஸிங் யங் வுமன்
சிறந்த தழுவல் கதை – தி ஃபாதர்
சிறந்த சர்வதேச திரைப்படம் – அனதர் ரவுண்ட் ( டென்மார்க் நாட்டு படம்)
சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லுயா (ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்கியோ லோபெஸ் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ரோத் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்)
சிறந்த இயக்குனர் – சோலி ஜாவோ ( நோமட்லேண்ட் )
சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்
சிறந்த அனிமேடட் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த அனிமேடட் படம் – சோல்
சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்
சிறந்த ஆவண படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – டெனெட்
சிறந்த துணை நடிகை – யூன் யூ ஜங் ( மினாரி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனல்ட் கிரஹம் பர்ட்
சிறந்த செட் அலங்காரம் – ஜான் பாஸ்கலடூபிள் டாகர்
சிறந்த ஒளிப்பதிவு – எரிக் மெஸ்செர்மிட்
சிறந்த எடிட்டிங் – மைக்கேல் ஈ.ஜி.நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)
மனிதாபிமான விருது – டைலர் பெர்ரி
சிறந்த மூல இசை – சோல்
சிறந்த மூல பாடல் – ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா ( ஃபைட் ஃபார் யூ பாடல்)
சிறந்த படம் – நோமட்லேண்ட்
சிறந்த நடிகை – பிரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமட்லேண்ட்)
சிறந்த நடிகர் – ஆன்டனி ஹாப்கின்ஸ் (மாங்க் )