90நாட்கள் ரிஷாட் பதியுதீனையும் சகோதரரையும் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

0
284
Article Top Ad

 

முன்னாள் அமைச்சரும் அகில பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனையும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனையும் இன்று (27) முதல் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான Detention Order (DO) பெறப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீனும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த 24ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இருவரும் கைதுசெய்யப்பட்டபின்னர் பெறப்ட்ட 72 மணிநேர தடுப்பு உத்தரவு அனுமதி இன்றைய தினத்தோடு காலவதியாகவிருந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சு இருவரையும் மேலும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை. அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமை ஆகிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி  Detention Order (DO)க்காக

பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் அதிபர் அஜித் ரோகண சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.