மேல், வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் பூட்டு!

0
269
Article Top Ad

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை இந்த வாரம் மூடுவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை மேற்படி பாடசாலைகளைத் மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த இரு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டு்ள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகியன கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் ஆபத்தானவையாகக் காணப்படுகின்றன.

இந்த இருமாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் ஆகியன மிகவும் அதிகூடிய அபாயநிலையைக் காண்பிக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மேலும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் ஏனைய மாவட்டங்களில் செய்யப்படும் போது அங்கும் இதே நிலையை எதிர்பார்க்க முடியும் என அவர் மேலும் கூறினார். மக்கள் மேலதீக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கோரும் அவர் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மக்கள் தமது வீடுகளில் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என தெரிவித்த மஹிந்த பாலசூரிய அவசரத் தேவை என்றால் மாத்திரமே வெளியே செல்ல வேண்டும் எனக் கூறினார்.