யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழாவை ஏற்பாடுசெய்தமைக்காக அந்த ஆலய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்றையதினம்
கைதுசெய்யப்பட்டதையடுத்து சமூக வலைத்தளத்தில் காரசாரமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுபவர்பவர்கள் யாழ்ப்பாணத்தில் தேர்த்திருவிழாவை ஏற்பாடுசெய்தமைக்காக கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்வார்களேயானால்
நுவரேலியாவில் பெருந்திரளான மக்கள் கூடுவதற்கு வழிகோலிய நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தவர்களை ஏன் கைதுசெய்யவில்லை எனக்கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பதிவில் ‘ நாம் சட்டங்களை சமமாக நடைமுறைப்படுத்துகின்றவர்களாக இருப்பின் ஏன் நுவரேலியாவில் பந்தய நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்த ஏற்பாட்டாளர்களையும் அவர்கள் கைதுசெய்திருக்கவேண்டும் அல்லவா’ என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.