யாழ் நாச்சிமார் கோவில் தலைவர் செயலாளர் கைது ஏன்?

0
319
Article Top Ad

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை  ஸ்ரீ காமாட்சி அம்மாள் ஆலயத்தில் அரசாங்க சுகாதார நடைமுறைகளை மீறி தேர்த்திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசங்களையும் அணியாமல் இந்த ஆலயத்திருவிழாவில் பங்கேற்றிருந்ததை புகைப்படங்கள் வெளிப்படுத்தின.

நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழா இந்தப்புகைப்படங்கள் வெளியாகியதை அடுத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.

நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி ஆலயத்திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலை ஏற்படுத்த வழிசமைத்தத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே

யாழ் வண்ணார்ப்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை மறுதினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மேலும் அறியும் வகையில் ஆலய நிர்வாகத்தினரை 0212229486 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்புக்களை மேற்கொண்டபோதும் அவர்களோடு பேசமுடியவில்லை

நாட்டில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மேமாதம் 31ம் திகதிவரை பெருமளவான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.