மத்தியூஸ், திமுத், சந்திமால் உட்பட சிரேஷ்ட வீரர்கள் பலர் இலங்கையின் ODI மற்றும் T20 அணிகளில் இருந்து நீக்கப்படும் சாத்தியம்?

0
329
Article Top Ad

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள எதிர்வரும் ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர்களுக்கான இலங்கை அணியில் இருந்து சிரேஷ்ட வீரர்கள் பலரை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் பரிசீலித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கட் தொடர்களுக்கான இலங்கை அணியில் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களான திமுத் கருணாரட்ண ,அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் ,சுரங்க லக்மால் மற்றும் திஸார பெரேரா ஆகியோர் தெரிவுசெய்யப்படும் சாத்தியமில்லை என இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களில் ஒருவர் முன்னணி ஆங்கில இணையத்தளமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

“தேர்வாளர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகின்றார்கள். அப்படியானால் சிரேஷ்ட வீரர்கள் பலர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அடுத்து ஓரிரு நாட்களில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அணி அடுத்த மாதத்தில் பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் சர்வதேசத் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் ஜுன் மாதத்தில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இலங்கைத் தேர்வாளர்கள் ஒருநாள் சர்வதேச அணியில் இருந்து அணித்தலைவர் திமுத் கருணாரத்னவை நீக்குமிடத்து T20 அணியின் தலைவராக உள்ள தசுன் சானக்க அந்தப்பொறுப்பை ஏற்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.