கே.வி. ஆனந்த் : திரையில் குமுறிய ஊடகவியலாளன்

0
441
Article Top Ad
தனது அற்புதமான ஒளிப்பதிவால் முத்திரை பதித்த  ஒளிப்பதிவாளரும்,இயக்குநருமான, கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.
தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.
பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர்.
பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்று வந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக இயக்குநர் கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.

முதல் திரைப்படத்திலேயே தனது அற்புதமான கற்பனாசக்தி நிறைந்த ஒளிப்பதிவிற்காக தேசிய விருது பெற்ற கே.வி. ஆனந்த் ஆரம்ப காலத்தில் புகைப்பட

ஊடகவியலாளராக திகழ்ந்தமையால் அவரது திரைப்படங்களில் ஊடகத்துறையை துகிலுரிக்கவும் தவறவில்லை.

அவரது மறையை அடுத்து பிரபல இலங்கை ஊடகவியலாளர் சதீஷ் கிருஷ்ணபிள்ளை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இதோ…

“நேற்று ஒருவர் Pitching என்றால் என்னவென்று கேட்டார்.
இது News Room சம்பந்தப்பட்ட விஷயம். செய்திப் பிரிவிற்கு நிறைய செய்திகள்
வரும்.
எந்தெந்த செய்திகளை சேர்ப்பது, எவ்வாறு சொல்வது, எப்படி வரிசைப்படுத்துவது என்பதெல்லாம் Editorial Meeting இல் தீர்மானிக்கப்படும்.
இதற்குள் தத்தமது News Stories ஐ சேர்ப்பதற்கு செய்தியாளர்கள் போட்டி போடுவார்கள்.
தாம் சேகரிக்க விரும்பும் செய்தி ஏன் பெறுமதியானதாக இருக்கிறது என்பதை விபரிக்க வேண்டும். சாதக பாதகங்களுடன் பெறுமதியை எடுத்துரைப்பதை Pitching என்பார்கள்..
நேற்று முன்தினம் மற்றொருவர் ஊடகம் படிக்க வந்தார். நால்வகை ஊடகங்களின் பலங்களையும், பலவீனங்களையும் பட்டியல் இட்டேன்.
பத்திரிகையெனில்,இன்றைய செய்தி நாளை தான் அச்சில் வரும் என்பதையும் கூறினேன்.
இரு விடயங்களும் தமிழ்ப் படமொன்றில் வரும். அதன் பெயர் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்கியது.
Visual Communications இல் முதுகலைமாணி பட்டத்துடன் India Today உள்ளிட்ட பத்திரிகைகளில் புகைப்பட செய்தியாளராக கடமையாற்றியவர். பின்னர் திரைத்துறையில் பிரவேசித்து, இயக்குனராக தடம்பதித்த கோ, கவண் ஆகிய படங்களில் அவரது இதழியல் மோகத்தின் தகிப்பு நுண்விவரணைகளாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
“கோ”வில் ஜீவாவின் கதாபாத்திரம், பத்திரிகையாளர் ஆனந்தின் நிறைவேறாத கனவுகளின் வடிகால் என்ற விமர்சனங்களும் உண்டு.
மறுபுறத்தில், கவண் என்ற திரைப்படம் சமூகவியல் கண்ணோட்டத்தில் Media Ownership முதலான கோட்பாடுகள் பற்றிப் பேசியது.
முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்குள் அரசியல் நோக்கம் கொண்ட உரிமையாளர்களும், எலும்புத் துண்டுக்காக வாலை ஆட்டும் அடிவருடிகளும் இருக்கும் ஊடக விபச்சாரத்திற்குள், உண்மையைத் தேடுதலின் சிரமங்களை சித்தரிக்க முனைந்திருப்பார்.
தமிழ்த்திரையுலகில், ஆங்காங்கே ஜோல்னா பையுடன் அலையும் ரிப்போர்ட்டர் பாத்திரங்கள் வந்தாலும் ஊடகவியல் பற்றி பேசும் நேர்மையான படைப்பொன்று உருவானதாகத் தெரியவில்லை.
(சலங்கை ஒலியில், ஒரு நிருபராக சைலஜாவின் நடனத்தை கமல் விமர்சித்து எழுத, பத்திரிகை நிறுவனத்தின் முதலாளி சார்பில் எடிட்டர் மன்னிப்பு கேட்கச் சொல்லும் Media Ownership அடக்குமுறை காட்சி விதிவிலக்கு)
வணிக நோக்கிலான சமரசங்களுடன், ஐம்பது பேரை அடித்து நொறுக்கும் கதாநாயக பிம்பங்களுடனேனும், சமகால ஊடக அரசியலுக்கு நெருக்கமான இரு ஜனரஞ்சக திரைப்படங்களைத் தந்த கே.வி.ஆனந்த், எதிர்காலத்தில் Media Literacy ஐ மேம்படுத்தக்கூடிய உன்னதமான படைப்பொன்றைத் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.
ஊடகம் பற்றி கேள்வி கேட்போரிடம் காட்டி அந்தப் படைப்பைக் காட்டி, “இதைப் பாருங்கள், விளங்கும்” என்று திருப்தியாக சொல்ல வேண்டும் என்ற ஆதங்கமும் இருந்தது..
ஆனால், அவர் 54 வயதிலேயே போய்விட்டார்.