78,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இறந்தவர்களை அடக்கம் செய்தனரா?

0
319
Article Top Ad

தற்போதைய உலகில் இறந்தவர்களை அடக்கம் செய்வது ( புதைத்தல் ) அன்றேல் தகனம் செய்வது ( எரித்தல்) பொதுவான நடைமுறையாக உள்ளது.

மூன்று வயதுகூட நிரம்பியராத குழந்தையொன்று 78000 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஆபிரிக்க நாடான கென்யாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தைக்கு ஸ்வாஹிலி மொழியில் குழந்தை என அர்த்தப்படும் Mtoto என்ற புனைப்பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தையின் சிறிய மார்புப்பகுதியுடன் சேர்த்து கால்கள் பிணைத்து வைக்கப்பட்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

ஆரம்ப காலமனிதர்களின் வரலாறு தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற ஆய்வாளர்கள் நவீன மனிதனின் பிரசன்னத்தை 300 ,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பதிவுசெய்துள்ளனர்.

தற்போது 78 ,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்பு ஏன் இவ்வளவு இடைவெளி என்பதே பெரும் கேள்வியாகவுள்ளது.