கனடாவிற்கான இலங்கைத்தூதுவர் பதவியை ஏற்கமறுத்த சட்டமா அதிபர்

0
365
Article Top Ad

கனடா நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்க பணியிலிருந்து விடைபெறும் சட்டமா அதிபர் தபுல டி லிவேரா மறுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிடமாகவுள்ள கனடா தூதுவர் பதவிக்கு தபுல டி லிவேராவின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

எனினும் தபுல டி லிவேரா ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்க மறுத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து நாட்டுமக்களுக்காக சேவையாற்ற விரும்புவதாக தபுல டி லிவேரா தெரிவித்துள்ளார்

முன்னதாக கனடா நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயரிடப்பட்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸின் நியமனத்தை ஏற்பதற்கு கனடா மறுத்திருந்தது.

போர்க்குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே சுமங்கல டயஸின் நியமனத்தை ஏற்க கனடா மறுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.