20 இலட்சம் ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கு முயற்சிக்கிறாத இலங்கை அரசு?

0
295
Article Top Ad

இலங்கையில் மொத்தமாக 7 மில்லியன் அதாவது 70 லட்சம் வரையிலான ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. அதில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம்ஃபேஸ்புக்  கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

அந்தவகையில், குறித்த கணக்குகளை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை

மேற்கொள்ளவுள்ளதுடன் அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு அனுமதி கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகள் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதங்களைத் தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்இ இளையோரைச் சீரழிக்கும் சமூக விரோதச் செயற்பாடுகளைத் தூண்டுவதற்கும் இதுபோன்ற பேஸ்புக் கணக்குகள் வழிவகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூகக் கட்டமைப்பையும் வழிநடத்தும் வகையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.